

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை றொபின்சன் திலகரட்டிணம் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நித்தியானந்தன், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
கரன்(பின்லாந்து), தனு, அபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மலர், காலஞ்சென்ற ஜெயரட்டிணம், ஜீவா(சுவிஸ்), விஜயரட்டிணம், கமலினி, சாந்தி, சாள்ஸ்(இந்தியா), யூலியற்ஜெயா(சிறீ- கனடா), மீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைமணி, ஜெயமலர்(சுவிஸ்), ரதி மரியதாஸ் மார்லின், ராஜன், வசந்தகுமார், நித்தியசெல்வி(பின்லாந்து), நித்தியானந்தி(கனடா), காலஞ்சென்ற நித்தியசெல்வன், நித்தியதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சதீஸ், மணிவண்ணன், கமலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஜிதா, அனித்தா, நிறோஜினி, ஸ்செபான் திவாகர் சுபாகர், றம்மியா, ருசாந், சஜீ, ஜசிகரன், சந்தியா கஜானன், ஜெயதாரணி(துர்க்கா), அக்ஷா, அக்ஷி, அனிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நிறோ, குமார் ருசாந்தி மற்றும் சூட்டி, விஜிதா, அசோக், சஞ்சிவ், சரோன் கௌதன், தனுசன், சுமி சியாமினி, மிலான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு சூசையப்பர் சேமக்காலையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My room has enough frames for your pictures, but my heart still remains empty without your hugs