யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்களின் நன்றி நவிலல்.
மாதங்கள் ஒன்று ஆகிவிட்டதையா
உங்கள் பாசமுகம் மாறாது எமக்கு
பாரினில் எமக்கு நீர் மேலான வாழ்வு தந்தீர்
பரிதவித்து நிற்கின்றோம் வேர் அறுந்த மரம் போல
ஆண்டுகள் தொண்ணூறு ஐயாவிற்கு
ஆண்டவன் அளித்திட்ட பரிசாகும்
வரமாக கிடைத்த வாழ்க்கைத் துணை
உறவாகக் கிடைத்திட்ட ஓர் சகோதரன்
ஊர் போற்ற வாழ்ந்த இல் வாழ்க்கை
மகிழ்வினில் மிதந்திட மக்கட்பேறு
கொஞ்சிக் குலாவிடப் பேரப்பிள்ளைகள்
வயோதிய காலத்தில் இவர்
வரும் துயர் போக்கிடும் பூட்டப்பிள்ளைகள்
உயர்வாக மதித்து உறவு கொண்டாட
மருமக்கள், பெறாமக்கள், சகோதரர்கள்
மைத்துணர்கள், உறவினர்கள், ஊரார் என
விருட்சமாய் விரிந்து நின்றது இவர் இல் வாழ்க்கை
விசுவாசம் என்றும் சொத்தை இவர்
முச்சாகக் கொண்டார் எனவே
விடை பெறும் வேளையிலும் தன் உணர்வோடு
திருவிருந்தினை அருந்திடும் பாக்கியம் பெற்றார்
நித்திய வீட்டினில் பேரின்பம் கண்டிட
நிதமும் உமக்காய் வேண்டுகின்றோம்...
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது அவரது இல்லத்தில் வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.