யாழ். கூவில் புலோலி தென்மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden Untersiggenthal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தினி மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15/08/2023.
வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை
பெற்றெடுத்த தாயே உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்!
உங்கள் பிரிவால் துயருறும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகள்..