யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாமுவேல் சதாசிவம் எட்வேட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியான புன்சிரித்த முகமும்
அயராத உழைப்பும் - உறவுகளை
ஆதரிக்கும் உள்ளமும் வளமான வாழ்வுக்கு
அன்பால் கிடைத்த வரமே
அவனியை விட்டு நீங்கி-இன்றோடு
ஆண்டு ஒன்று ஆனதோ
ஆறவில்லை எம்துயர்
குறையேதுமின்றி காத்த - எமது
குடும்ப ஆலவிருட்சத்தின் - ஆயுள்
காலத்தை குறைத்தானோ
ஆண்டவன்
கண்ணீரில் எம்மை கரையவிட்டு
காலனவன் தன் கணக்கை முடிக்க
கடல் கடந்து சென்றீர்களோ
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
விண்ணுலகம் விரைந்துவிட்டீர்களோ
விடியும் பொழுதுகள் விழிநீரோடு
வாழுகின்றேன் எம் மழலைகளுக்காக
கண்முன்னே கரம் கோர்த்து நாம் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
நினைத்துருகாத நாளில்லை
நெஞ்சில் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை பிரார்த்திக்கும்
மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினர்.