1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாமுவேல் அன்டனி புஷ்பமலர்
மறைவு
- 09 DEC 2021
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Holstein ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாமுவேல் அன்டனி புஷ்பமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு
தந்துவிட்டு
இறையோடு
சென்று இன்று ஆண்டு
ஒன்று
வார்த்தைகளால் சொல்ல
முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
பார்க்கும் இடங்களெல்லாம்
உங்கள் புன்னகை பூத்திருக்குதம்மா
நீங்கள் எம்மோடு இருந்து வாழ்ந்த
காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள்
துடிக்க மறுக்குதம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை ஒன்று அல்ல
ஓராயிரம் ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத
காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்