Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 SEP 1929
மறைவு 12 SEP 2024
அமரர் சாம்பசிவம் பராசக்தி 1929 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாம்பசிவம் பராசக்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே !
நீங்கள் இல்லாத உலகம் என்றும்
இருள்மயமானது எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை !

இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு !!
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில்
அணையா நெருப்பாய்!
உங்கள் புன்னகை
துளிர்விட்டுத் தளிர்களாய்!
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்!!

அடுத்த பிறப்பெல்லாம் அம்மா நீயே!
உங்களை நினைக்கையில் கண்
நனைந்து கடந்திடும் கணங்கள்!

மனங்களில் மறையாது உந்தன்
நாட்கள் எம் மரணம் வரை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: பிள்ளைகள், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நித்திலன் - குடும்பத்தினர்