யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவிலை புகுந்த இடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இந்திராணி ராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை..
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-10-2023 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
அன்புள்ளத்தோடு அனைவரைையுும் அரவணைக்கும் அம்மாவின் இழப்பு மிகவும் வேதனைக்குரியது, உமா அக்கா,உஷா,லவன் மற்றும் குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அம்மாவின் ஆத்மா...