பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், இலண்டனை வசி்ப்பிடமாகவும் கொண்டிருந்த சாம் பாலமோகன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பதிமூன்று ஆண்டுகள் சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
மகனே
ஆண்டவன் அழைத்திட்ட
பின்னாலே
அழுகிறது
இதயம் வெறுமையாகவே...
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே
இருக்கும் மகனே...
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன்
நிலவு முகம் தேயாதடா
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...
உன் ஆத்மா
சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உந்தன் நினைவால் வாடும் தாய், தந்தை,
நிருபன்(அண்ணா), பிரியா(அண்ணி),
ஆருசன்(பெறாமகன்), கோமஸ்(அண்ணா), கவிதா(அண்ணி)...