1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சலோசனி வரதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 25.07.2023
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும் அன்பு
கணவர், பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்