5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரமலிங்கம் சச்சிதானந்தம்
வயது 51
அமரர் பரமலிங்கம் சச்சிதானந்தம்
1969 -
2021
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் சச்சிதானந்தம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 5 அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
நீ தந்துவிட்டுப்போன காயம் தினம் தினம் எமை
கொல்வதால் மீண்டும் ஒரு முறை வந்து
உன் மூச்சினால் எமை உயிர்பித்துப் போ!
தேடுகின்றோம் தேம்பியே போகிறோம்
5 ஆண்டு மட்டுமல்ல
ஓராயிரம் ஆனாலும் ஓயாமல் நினைவலையாய்
மனதோடு கலந்திருப்பாய் நீயே!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்