யாழ்ப்பாணம் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் விஜயபாரதி அவர்களின் நன்றி நவிலல்.
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை...
அன்பின் அப்பா அழியாத ஓவியமே.!
அழைத்து விட்டாரோ
ஆண்டவர் தம்முடனே?
நாட்கள் கடந்தாலும்
ஆறாத உங்கள் பிரிவு
ஆறாய் ஓடுகின்றது
தினம் தினம் எங்களின் கண்களில்!!
உங்கள் பாதக் கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்!!
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.