2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:21/12/2024.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் திலீப்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
உன் புன்னகை காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படிந்த நினைவுகளை தந்துவிட்டாய்!
மீண்டு வருவாய் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
உன்னை நினைக்கையில் விழியோரம் கசியும்
கண்ணீர் துளிகள் உறவுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஒரு நொடி மௌனமாக்கும்!
மீளவும் பெற முடியுமா
நீ எம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
இன்னும் பல ஆண்டுகள் கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா உம் நினைவுகள்!
காலங்கள் தேய்ந்திடினும் உன் நினைவுகள்
அழிந்திடுமோ ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்