யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், தாவடி மானிப்பாய் சந்தியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வாரத்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்த எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆலமரமாய் நீங்கள் எங்களை
அரவணைத்தீர்கள்
விழுதுகளாய் நாம் இருந்தோம் அம்மா!
எங்கெங்கோ வாழ்ந்தாலும்
எம்மை இணைக்கும் சக்தி
தொலைதூரம் இருந்தாலும்
உங்கள் குரல் கேட்டு
மகிழ்ந்திருந்தோம் அம்மா!
நாட்கள் 31 கடந்தாலும்
உங்களின் உள்ளத்து நினைவலைகள்
இன்னும் ஓயவில்லை அம்மா!
முத்துபோல் ஐந்து பிள்ளைகள் பெற்றீர்
அவர்கள் தான் சொத்தென
இன்பம் கண்டீர்கள் அம்மா!
நிரப்ப முடியாத வெற்றிடத்தை
உருவாக்கி எம்மை நிலை தடுமாற
வைத்தீர்கள் அம்மா!
ஆசைகள் காட்டியா எங்களை
வளர்த்தீர்கள் அம்மா இல்லையே
பாசத்தையே காட்டியெல்லோ எங்களை
வளர்த்தீர்கள் அம்மா!
இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே எமக்கு தாயாக வேண்டும் அம்மா!
உங்களின் ஆத்மா ஐயாவுடன்
இணைந்து சாந்தியடையைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையமூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம், துண்டுப்பிரசுரம், பதாதைகள் ஊடாக அனுதாப அலைகளைத் தெரிவித்தவர்காளுக்கும், நேரில் கலந்து கொண்டு அனைத்து வழிகளிலும் உதவி நல்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றிளைக் காணிக்கையாக்குகின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 09-03-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலும்(Paris), புங்குடுதீவு மடத்துவெளி நாகதம்பிரான் ஆலய மண்டபத்திலும் நடைபெறும்.