2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம்
இளைப்பாறிய கணக்காளர்
வயது 99

அமரர் சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம்
1924 -
2023
வேலணை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
44
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி சரவணை மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
please accept our deepest condolences. May his soul rest in peace