Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 JAN 1924
மறைவு 07 JUL 2023
அமரர் சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம்
இளைப்பாறிய கணக்காளர்
வயது 99
அமரர் சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் 1924 - 2023 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி சரவணை மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்