யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டமனாறு, கொழும்பு, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் எமைவிட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும்
பசுமையாய் எம் நினைவுகளில் எங்களுடன் வாழ்கின்றீர்கள்
இந்து! ஒஸி அன்ரா! என நாமும் எம் பிள்ளைகளும்
அழைத்தும் நினைத்தும் மகிழ்ந்துகொண்டும் தானிருக்கின்றோம்.
எங்கள் வாழ்விலும் எம் பிள்ளைகள், பேரப்பிள்ளையிலும் கூட,
உங்கள் உயிர்த்துடிப்பான செயற்பாடுகளை கண்டு அகமகிழ்கின்றோம்.
எங்கள் குடும்பத்தில் மகளாகப்பிறந்தாலும் - அன்பான சகோதரியே
நீங்கள் ஒரு அண்ணனைப்போல், ஒரு தந்தையைப் போல்
உங்கள் உயர்ந்த சுயநலமற்ற அர்ப்பணிப்போடு உரிமையுடன்
எங்கள் மீது பாசம், பரிவு, கனிவு, கண்டிப்பு காட்டி
எங்களை வாழவைத்தீர்கள், வாழ வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.
உங்கள் சினேகிதர்களோடும் நல்லுறவைப் பேணி வந்தீர்கள்
எங்கள் உற்றார் உறவினருக்கும் பிரியமானவராக விளங்கினீர்கள்
உங்கள் நினைவுகளுடன் எம்மனதில் நீங்கா இடம்பெற்ற
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு நீ தான் அம்மா!
அன்புச்சகோதரிகள்:
அருந்ததி குடும்பம்
வசந்தி குடும்பம்
வளர்மதி குடும்பம்
தொடர்புகளுக்கு
- Mobile : +4790794955