யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டமனாறு, கொழும்பு, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அருந்ததி, தமயந்தி, வசந்தி, வளர்மதி, உதயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்பும் ஆதரவும் கொண்ட
எங்கள் அன்புச் சகோதரியே இந்து !
நாலாண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் இன்றும்
ஒளிவிளக்காகத் தான்
பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்
எங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு
கணப்பொழுதிலும் – நீங்கள்
எங்கள் மீது காட்டிய அன்பு, பாசம்,
பரிவு அனைத்தையும்
பசுமையாக இன்றும்
உணர்கின்றோம்- அன்புத் தெய்வமே!
நீங்கள் எங்கள் சகோதரியல்ல
அன்புத்தாய் அம்மா!
எம் பிள்ளைகளுக்கெல்லாம் Aussie Aunta என்ற
பாசமலராகத் தான் திகழ்ந்தீர்கள்..
அன்று மட்டுமல்ல இன்றும் ஒளிவிளக்காக
எம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை
கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்
விண்ணுலகத்தில் இருந்து
எங்கள் எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் தாயே!
உங்கள் நினைவுகளோடு வாழும்
அன்புச் சகோதரங்கள்,
மைத்துனர்கள், பெறாமக்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!