Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 15 SEP 1964
இறப்பு 15 JAN 2020
அமரர் றொபின்சன் றூபி
வயது 55
அமரர் றொபின்சன் றூபி 1964 - 2020 பாஷையூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும்  கொண்ட றொபின்சன் றூபி அவர்களிளின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் உருவம் நீ
பண்பின் சிகரம் நீ
பாசத்தின் உறைவிடம் நீ
மொத்தத்தில் எல்லாமே நீ
எங்கு சென்று விட்டாய் நீ

கட்டிய கணவனை தனியே தவிக்க விட்டு
நீ எங்கே சென்றாய்
நீ இல்லாமல் அவர் எப்படி வாழ்வார்
அது கூடவா உனக்கு தெரியாது
நீங்கள் இருவரும் வாழ்ந்த இல்லத்தில்
நீ இல்லாமல் அவர் தனி மரமாய் நிக்கின்றார்

உன் உடன் பிறப்புக்கள் நாங்கள்
உன் பிரிவை ஏற்க முடியாமல்
நிலை குலைந்து நிக்கின்றோம்
ஒவ்வொரு விடியலும் உன் குரல் கேட்டு தானே நாங்கள் கண் முழிப்போம்
ஒவ்வொரு இரவும் உன் குரல் கேட்டுத்தானே
உறங்க போவோம்
இனி இந்த பாசமான குரலை கேட்க்க முடியாதே என்று மனமுடைந்து
அன்னை இல்லா பிள்ளைகள் போல்
அனாதையாக நிக்கின்றோம்

காலக் கொடியவன் கண் இமைக்கும் நேரத்தில் இரக்கமில்லாமல் உன் உயிரை பறித்து விட்டான்
நாங்கள் யாரிடம் போய் ஆறுதல் அடைவோம்
“ வேலைக்கள்ளிக்கு பிள்ளை சாட்டாம்”
உன் உயிரைக் பறிக்க காலக் கொடியவனுக்கு
காச்சலா சாட்டு
உறவுகளும் நீ தேடிய நண்பர்களும் எங்களோடு சேர்ந்து புலம்பி அழுத வண்ணமாக உள்ளார்கள்

நீ பாசமாக தேடிய உன்னை பாசமாக
அன்ரி என்றும் , றூபி அம்மா என்றும் , உன்னை தேடி வந்த இளம் உள்ளங்கள்
உன் பிரிவு செய்தி கேட்டு கதிகலங்கி
உன்னை போல் அரவணைக்க யாரும் இல்லையே என்று கதி கலங்கி நிக்கிறார்கள்

உன் உடன் பிறந்த சகோதர்ர்களின் பிள்ளைகள் டென்மார் பெரியம்மா,
டென்மார்க மம்மி, பெரியத்தை என்று
அன்பாய் கூப்பிட்டவர்கள் நீ இல்லையே
என்று ஏங்கி ஏங்கி கண்ணீர் சிந்தியபடி உள்ளார்கள்

உன் கணவனின் உறவுகள் ஒவ்வொருவரும்
பல உறவு முறை சொல்லி நீ இல்லை என்பதை நம்ப முடியாமல் கதறியவர்களாக
கண்ணீர் மல்க நிக்கிறார்கள்

சில நாட்களுக்கு முன்னும் எங்கள்
எல்லோரோடும் சந்தோஷமாக சுவாசித்த
சுவாச காற்று மாறுவதற்குள்
நோய் என்ற வடிவில் உன் வாழ்வு வெகு விரைவில் முடியும் என்று எதிர் பார்க்க வில்லை
உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவுத் திருப்பலி 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 05:45 மணியளவில் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெறும்.

இங்ஙனம், கணவன், சகோதரர்கள்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.