1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ரிஷானி சிவராஜ் ஜெட்
2018 -
2019
Liverpool, United Kingdom
United Kingdom
Tribute
29
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், பிரித்தானியா liverpool ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷானி சிவராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா மகளே ரிஷானி ....!
முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வமே...உன்
நினைவுகளையும் எங்கள்
துயரங்களையும் கண்ணீரால் மாலையாக்கி
உனக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் வான்மதி.நான் Rishani sivaraj jet அவர்க்களுடைய அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு தாங்கமுடியாத...