கொழும்பைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சி
சாந்தகுமார் அமிர்தலிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்களருமைச் சகோதரனே
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட
கனா ஏராளம்! அத்தனையும் நீ
கனவாக்கி
எங்கு சென்றாய்!
25 வருடங்கள் தேய்திடுனும்
உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
உறவுகள் புலம்புகின்றன
உன் அருமை மனைவி ஜெகா
அன்பு மகள் அபிலாஷா,
உன் அருமைச் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் யாவும்
அலறும் சத்தம் கேட்கவில்லையா?
ஊரே உனை நினைத்து உருகுகின்றது
மீண்டும் வாராயோ?
உன் பிரிவால்
துவண்டு கிடக்கும்
உள்ளங்களுக்கு
ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மகள்: ஜெகா, அபிலாஷா
சகோதரர்கள்: உஷா, றோகான், ஆஷா, அஞ்சு - ஓக்லண்ட், நியூசிலாந்து.
"You may be gone, but your impact on our lives remains forever"