யாழ். வடமராட்சி அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbron ஐ வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரேவதி ஸ்ரீகுமார் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
கணவர் ஸ்ரீகுமார், பிள்ளைகள் ஷஸ்ரியான், ஸ்ரீஷான்
May their soul find rest