Clicky

பிறப்பு 31 DEC 1935
இறப்பு 25 MAR 2025
திருமதி ரேவதி சண்முகம் 1935 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Revathy Shanmugam
1935 - 2025

*விழிநீர் அஞ்சலி* அமரர்: சண்முகம் ரேவதி பிறப்பு:31.12.1935 இறப்பு: 25.03.2025 பாரினிலே பரிதியாகி பலகரங்கள் நீட்டி நின்று // சோர்வில்லா சோதியாகி சோதனைகள் பலவென்று // ஆர்வம்மிகவே உறவுகளை அணைத்தெடுத்து காத்தவரே// பாராமுகம் கொண்டு இன்று படுத்துறங்கும் நிலை தகுமோ// முற்றத்து வெண்ணிலவாய் முகம் காட்டும் எங்கள் மாமி// அற்றைப் பொழுதெல்லாம் அணைத்தெடுத்த அன்பு மாமி // சற்றும் ஓயாமல் சரித்திரமாய் ஒளிர்ந்த மாமி// முற்றும் எமைவிட்டு மறைதலுமே முறைதானோ// உறவொன்று உதிர்கையிலே உதிரங்கள் உறையுதம்மா // மறப்போமா தாயே உனை மண்ணுள்ள காலம் வரை// துறந்திட்டே பூவுலகை தூரதேசம் விரைந்தாலும் // அறம் காத்த அன்னை உங்களை வாழும்வரை அகம் நிறைத்து போற்றி நிற்போம்// உங்கள் தூய ஆன்மா என்றும் இறையடியில் இன்புற்று இளைப்பாற இறைவன் பாதம் பணிந்து வேண்டுகின்றோம் ஓம் சாந்தி🌺🙏 ஓம் சாந்தி🌺🙏 ஓம்சாந்தி🌺🙏

Write Tribute

Tributes