மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஷன் றெஜினோல்ட் ஜெயசீலன் நிசாந்தன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை மன்றாடுகின்றோம். பிரிவினால் துயர் அடைந்த அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆண்டவர் துணை நிற்பார்.