
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பத்தொன்று நாட்கள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாட்கள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-03-2025 சனிக்கிழமை அன்று Pfarrei St. Theodul Littau Gasshofstrasse 2, 6014 Luzern, Switzerland(Parking facilities: Zentrum-Fanghöfli, 6014 Luzern, Wyss Treuhand AG) எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளிகின்றோம்.