ஆன்மா அமைதியுறட்டும்! தவராணி - சிவானந்தம் இணையர் பெற்ற, தலைமகனாம் ராஜுஎனும் இரவிசங்கர் அவசரமாய் விண்ணுலகம் புகுந்ததேனோ? அன்புமனை மக்களெல்லாம் பரிதவிக்க, இவர்அகவை அறுபதினை எட்டும் முன்பே இன்னுயிரை எமன்வந்து பறித்ததேனோ? அவரன்பு உடன்பிறந்தார் அழுகை கேட்டு, அண்ணன்இவர் உயிர்த்தெழுந்து திரும்புவாரா? இளம்வயதில் யாழ்ப்பாணம் நகரை விட்டு இடம்பெயர்ந்து சென்னையிலே கல்வி கற்று, புலம்பெயர்ந்த குடும்பத்தார் அனைவருக்கும், போர்க்காலச் சூழலிலே துணையிருந்து, உளம்வருத்தும் நிலைமையிலும் உழைத்துயர்ந்து, உறுதியுடன் இல்லாளை மணமும் செய்து, நலமுடனே நார்வேயில் குடும்பத்தார்க்கு நற்றுணையாய் இருந்தவரென் இளவல் அன்றோ? வருந்துகிறேன்! இவர்மறைவைக் கேள்வியுற்று, மாணவராய்ச் சென்னையிலே பார்த்த நாளை, நெருக்கமுடன் எங்களிடம் பழகிய நாள்என் நினைவுகளில் நிழலாட கலங்குகின்றேன்! மறப்பதற்கு இயலாத பேரிழப்பு! மனைவி, மக்கள், உடன்பிறந்தார் ஆறுதல் கொண்டு, துறப்பதனால் இவர்ஆன்மா அமைதி காணும்! துக்கத்தை இறையருளே போக்க வேண்டும்! ஆழ்ந்த இரங்கலுடன், கு.மா.பா.திருநாவுக்கரசு
ராஜு, உங்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களும் ஆத்ம சாந்திக்கு அஞ்சலிகள். தருணத்தில் உதவி செய்யும் உங்களுடைய உயர்ந்த மனப்பாங்கு உங்கள் சந்ததியினருக்கு எப்போதும் துணைநிற்கும். நிம்மதியாக போய்...