Mr Jothiravy Ravishankar
Age 57
Tribute
பிராத்திக்கின்றோம்
ஜோதி சங்கர் நட்பின் நினைவலைகள்…….!
ஹாட்லியின் மைந்தன் இவன்
மெதடிஸ்ட்டின் மென்மை இவன்
விக்னேஸ்வராவின் நேசம் இவன்
நெல்லியடியில் கில்லி இவன்
மெல்லிய உருவம் துள்ளிய நடை
துல்லிய உயரம் தொலைக்கும் பார்வை
வெள்ளிய மனசு வெளுத்த இதயம்
அள்ளிய அழகு அணைக்கும் அன்பு
சித்திரையின் புத்திரனே நீ
நித்திரையில் போனதேனோ
முத்திரையில் முகம் புதைத்து நீ
பத்திரமாய் வீழ்ந்ததேனோ
யோதிரவியும் ரதிதேவியும்
பெற்றெடுத்த செல்ல மகனே பவுண் குட்டியே
ரவிச்சந்திரா அக்காவின் ஆசைத் தம்பியே
ரவிசாந்தன் அண்ணாவின் அண்ணாவியே
ராதிகா அக்காவின் உடனிருந்த ராசனே
அன்பு மகள் சாய்த்திரியின் உயிர்த்திரியே
அன்பின் துஷியின் தூய துணைவனே
நண்பா,
உறவுகள் பிரிந்து துறவுகள் துறந்து
உறங்கச் சென்றாயோ
உறுமிய தேகம் திமிறிய சுவாசம்
இறுகிய இரத்தம் இயங்கா இதயம்
பதறிச் சென்றாயோ பாராமல் போனாயோ
காதலும் காயமும் கடந்தவன் நீ
சாதலும் சாயமும் சாடியவன் நீ
வலியுடன் வலிமையாய் வாழ்ந்தவன் நீ
பக்தியில் முக்தியாய் மூழ்கியவன் நீ
நண்பா,
கண் இழந்தும் நீ கண்ணாளனே
எண் இழந்தும் நீ ஏகலைவனே
வாழ் இழந்தும் நீ வள்ளலே
சொல் இழந்தும் நீ செம்மலே
பருவத்தின் புயலாய் தூவி தாண்டிய
பருத்தித்துறை வீதி உன்னை தேடுதடா
இளமையின் மிடுக்குடன் இன்பமாய் பறந்த
இலண்டன் மாநகரம் உன்னை தேடுதடா
காரில் வலம் வந்து காரிகை கண்ட
மெல்பேர்ன் மேம்பாலம் உன்னை தேடுதடா
பள்ளியின் நண்பனாய் பரிதவிப்புடன்
துள்ளிய நெஞ்சுடன் உன்னை தேடுறோமடா
உயிர் காக்கும் மருந்துகளை ஊர் ஊராய்
உயிர்ப்புடன் கொண்டு சென்றாய்
ஊன் உருகி உயிர் பெற்ற உறவுகள் இன்றுன்னை
வைத்திய சாலைகளில் வலம் வந்து தேடுதடா
ஹாட்லியின் காவிய நாயகனே
சிவஜோதியில் கலந்த ஜோதி சங்கரனே
ஹாட்லியின் பள்ளி நண்பர்கள் நாம்
வேலிகள் கடந்துன்னை வழியனுப்ப வந்தோமடா
உன் பாதார விந்தங்களில்
ஹாட்லியின் பூக்கள் சொரிந்து
ஜோதியுடனும் தேவியுடனும் கலந்துன்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
- சிறியன்
1981-88 ஹாட்லி கல்லூரி நண்பர்கள் சார்பாக
Write Tribute
My family and I had just learned about Ravishankar’s passing recently, and were shocked to hear the news. I can’t help but think back to our time studying together when we were children in...