யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனத்தை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுரேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசம் நிறைந்த உன் விழிகளின் ஏங்கும்
பார்வைக்குள் நாள் தோறும் நனையும் நாம்
நாளின் நினைவுகளில் எங்கள் வீட்டின் செல்ல பிள்ளையே..
உன் அம்மாவின் பார்வைகுள் உனக்கு
நாற்பத்திரெண்டு வயது அல்ல,குழந்தையே நீ
காணமுடியாத தூரமாய் சென்றதேனோ
சின்னன்னா உனக்கு காய்ச்சல் வந்தால் உன் நம்
எல்லோருக்கும் காய்ச்சல் வந்தது போல் உணர்வில் நாம் இருப்போம்,
உனது முகம் வாடினால் எம் மனம் நின்மதி அற்று போய்
அன்றயை நாளும் பொழுதும் இருப்போம்..
சின்னன்னா உன் நிகழ்
சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை
மாற்றிக் கொள்கின்ற நாளின் உன் ஆசை
தம்பியின் அரவணைப்பு தேடி சென்று
உன்னைப் பற்றிய பெரும் சிந்தனை உன் தம்பி கனவுகளில்
புலோகத்தில் வாழும் காலத்தில் வாழ்ததால்..
உன் தம்பியின் அரவணைப்பில் மேலோகத்தில்"
உனக்கு வாழ்க்கையை இனிமை நிறைந்ததாய் உணர்கிறேன்..
வழமை போலவே நம் மனகளில் உணர்வில் நீ எப்போதும்
எங்களுடன் வாழ்வதாய் இருப்போம்,
எங்களது காத்திருப்பு நாம் வாழும் காலம் முழுவதும்
ஒருபோதும் முடிவடையாது
ஏனெனில்,
நீ இல்லாமல் போய்விட்ட இந்த நிமிடம்
ஐம்பூதங்கலில் இரண்டு இல்லாதது போல்,
எங்கள் குடும்பத்தின் சகோதர பிணைப்பு இல்லாமல் போனது..
உன்னைத் தேடியும் நாம் அனைவரும் ஒருநாள் வர்ந்து சேருவோம்
நிலையில வாழ்க்கையின் முடிவைக்கான..
எம் பாசக்கூண்டின் பார்வையில் நீ எப்போதும் எமக்கு,
வீட்டின் செல்ல குழந்தையே!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 30-10-2025 வியாழக்கிழமை அன்று யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ள ஆத்மா சாந்திக்கிரியைகளில் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்குமாறும் அதனைத்தொடந்து நடைபெறவுள்ள மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.