யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Innisfil ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் இல்லத்து இதய தெய்வம் திருமதி. இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து எமது இல்லத்திற்கு நேரில் வந்தும் உலகின் பல பாகங்களில் இருந்து தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல், முகநூல் வழியாகவும் அழைத்து அனுதாபங்களை தெரிவித் தோருக்கும், பார்வைக்கு வைக்கப்பட்ட போது மண்டபத்திற்கு வந்து பார்வையிட்டோருக்கும், மலர் வளையங்கள் சமர்ப்பித்தோருக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டோருக்கும், இறுதிக் கிரியையில் எண்ணற்ற அளவில் கலந்து கொண்டோருக்கும், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும், இந் நினைவு மலரை அழகுறத் தொகுத்து அச்சிட உதவிய முகூர்த்தம் அச்சகத்தாருக்கும் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு சிறப்பித்தோருக்கும், ஆத்ம சாந்தி கிரியைகளை முறையாக நிறைவேற்றித் தந்த சைவமத குருமாருக்கும், மற்றும் பல வழிகளில் உதவியோருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"