
அமரர் இரத்தினவடிவேல் தனபாலசிங்கம்
ஓய்வுபெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் கமலா அக்காவை திருமணம் செய்த நாள் முதல் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தனம் அத்தான் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் எங்களுடன் மிகவும் அன்பாகவும் அன்னியோன்யமாகவும் எங்கள் வீட்டின் நன்மை தீமைகளில் பங்குபற்றுவார்
எமது தந்ததை மீது அதிக மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார் அதே போல் எமது தகப்பனாரும் தனம் மருமகன் என்று பாசமும் மதிப்பும் பாராட்டி வந்தார்
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த காலத்திலும் தொலைபேசியில் எம்மோடு உரையாடி எங்கள் குடும்ப நலன் பற்றி விசாரிப்பார்
அத்தானின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைகிறோம்
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு
அக்கா , பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாவருக்கும் எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute
உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்