
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல், ஆனந்தவல்லியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நடராசா, யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மாணிக்கரத்தினம் ராஜரத்தினம் அவர்களின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம், கந்தசாமி மற்றும் ஐயாத்துரை, மோனகுரு, சீதாலட்சுமி-ராமச்சந்திரன், பழனிவேல், காலஞ்சென்ற சண்முகராசா, இந்திரகுமார் மற்றும் சக்திவேல், சுந்தரலிங்கம், உருத்திரகுமார், இராஐகுமார்(பொட்டு சங்கர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜ்குமார், ஆனந்தரூபி, இரத்தினவடிவேல்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சியாமளா, நக்கீரன், நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிவர்ணன், கவிபாரதி, தனா, காருண், கவிநிலா, பிரதீபா- கவிவர்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவர்ணாவின் ஆசைப் பூட்டனும்,
பாலரானி- சுந்தரகுமார், ஆனந்தராணி- பாலேந்திரா, ரெட்ணராஜ், ஆனந்தராஜ், முத்துராஜ், மாவீரர் ரகு, சுகுமாரன், சஞ்சீவன், லசந்தன், பிரதீப், பிரகாஷ், தாட்ஷாயினி- கோகுலவரதன், வானதி- கணேந்திரன், தாரிணி- பாலச்சந்திரன், கல்யாணி பழனிவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாவீரர் தினேஸ், ஜதீஸ், சிந்துஜா- ரவிசந்திரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்