யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் செல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம்
உன் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அம்மா உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்!
தொலைந்துவிட்ட இந்த
மாதம் ஒன்று ஆனாலும் உம் முகத்தைதேடாத
நாட்களில்லை...???
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
கடந்த 04.05.2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்த அன்பும், பண்பும் பாசமும் நிறைந்த எமது குடும்ப குலவிளக்கு ஆகிய இரத்தினசிங்கம் செல்லம்மா அவர்களது மறைவு செய்தி அறிந்து உடன் ஓடி வந்து உதவிகள் பல புரிந்த உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் பின்னர் எமது இல்லம் நாடி வந்து எமது துயரில் பங்குகொண்டு ஆறுதல் கூறி எம்மை அமைதிப்படுத்திய அனைவருக்கும் இறுதி யாத்திரை தகனக் கிரியைகள் வரை பங்குபற்றி செய்த அனைவருக்கும் எமது நன்றிகள்.
நேரில் வரமுடியாத அன்பர்கள், தொலைபேசி ஏனைய ஊடகங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்த குறிப்பாக பத்திரிகையில் கண்ணீர் அஞ்சலி, மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் இன்று 03-06-2026 புதன்கிழமை அன்று நடைபெறுகின்ற ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டவர்களுக்கும், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி! நன்றி!! நன்றி!!!