யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 31 நாட்கள் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும் ...?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 25-07-2026 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சிவன் கோவில் Industriestrasse 34, 8152 Glattbrgg, Zurich, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆன்மா நற்கதியடையட்டும்! பிரிவால் துயருறுவோர், ஆறுதலுந் தேறுதலும் பெறட்டும்! ❤️🥲🙏