Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 FEB 1940
இறப்பு 17 DEC 2018
அமரர் இரத்தினம் தங்கராஜா
பிரபல ஜோதிடர், இளைப்பாறிய அதிபர்- கம்பளை றோமன் கத்தோலிக்க பாடசாலை, கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம், ஆனையிறவு மத்திய மகா வித்தியாலயம், ஆனைப்பந்தி மெதடிஸ் கலவன் பாடசாலை
வயது 78
அமரர் இரத்தினம் தங்கராஜா 1940 - 2018 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலமரமாகி நிழல் தந்து எமை காத்திட்ட
எங்கள் குளவிளக்கே குணக் குன்றே
அன்பிற்கு அர்த்தம் தந்தீர்கள் - அப்பா
அன்புடன் எங்களைப் பார்த்தீர்கள்
ஆண்டு ஒன்று வந்தாலும் - அப்பா
ஆறாது உங்கள் பிரிவின் கவலை

இன்முகத்துடன் உற்றார் உறவினரை ஆதரித்தீர்கள்
ஈகையிலே சிறந்து விளங்கினீர்கள்
உத்தமராய் வாழ எங்களுக்கு வழிகாட்டினீர்கள்
என் கடன் பணி முடிந்ததென்றே நம்
கண்முன்னே அன்பான மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உறவுகள் பேரப்பிள்ளைகளை
விட்டு விலகி நெடுந்தூரம் நீங்கள் சென்று விட்டாலும்
எங்கள் மனக் கண்ணில் என்று நிறைந்திருப்பீர்கள்

ஏட்டை தொடக்கி வைத்து பாசமான
மாணவ மணிகளை உருவாக்கி வைத்து உங்களுக்காக உருகவைத்தீர்கள்
சாஸ்திர கலையில் சரித்திரம் படைத்தீர்கள்
ஐயம் இல்லாமல் அரியபல சேவை செய்தீர்கள்
ஒட்டு மொத்த மக்களையும் புன்னகை பூத்த முகத்தாலும்
கனிவான பேச்சாலும் அன்பான அரவணைப்பாலும்
உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள் - அப்பா

ஒரு கலங்கரை விளக்காக வழி காட்டினீர்கள் 
ஔவியம பேசி இதயத்தை கவர்ந்தீர்
இறைவன் தந்த நல்வரம் அன்பான எங்கள் அப்பா 
இரு விழியில் ஒரு விழி இழந்தோம்
இமைக்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவுதானே
பள்ளிவரை நல் ஆசானாய் பாசமான குடும்பத் தலைவராய் 
எங்களை வாழ வழி செய்து ஒளி தந்த முழுநிலா
பிறை நிலா ஆனதே

உங்கள் பிரிவு சோகக்கதையானதே
இதை விதி என்பதா?
வினை என்பதா?கலி என்பதா?
வரமாக பாசமான அப்பாவை தந்த கடவுளின் சதி என்பதா? 
ஊழ்வினைப் பயன் என்பதா?
மறுபிறப்பு உண்டெனின்
மீண்டும் வர வரம் வேண்டுகிறோம்....

அன்பான அப்பாவே ஆசையின் எம்முயிர்த் தாத்தாவே
அன்பான மாமாவே மற்றும் அன்பான அனைத்து
உறவின் குருவே உங்கள் பிரிவின் வலியால் துடிக்கின்றோம்
உங்கள் நிமிர்நத நடையெங்கே? நீறிடும் சீரிய நெற்றி எங்கே?
சிவந்த உங்கள் இதழ்கள் எங்கே?
கூரிய பார்வை எங்கே?
வாரி வழங்கும் கைகள்  எங்கே?
கூறிடும் உங்கள் இனிய சொற்கள் எங்கே???
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல வரசித்தியான்
துணை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்