Clicky

பிறப்பு 22 MAY 1962
இறப்பு 10 JUL 2020
அமரர் இரட்ணம் சிவநேசன்
வயது 58
அமரர் இரட்ணம் சிவநேசன் 1962 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kavikco Parama Visvalingam 10 JUL 2020 Germany

அமரர் திரு ரத்தினம் சிவநேசன் அவர்களின் ஆத்ம ஈடேற்றப் பா கோயில்மணி ஒன்று சரிந்ததம்மா குலவிளக்கு ஒன்று அணைந்ததம்மா நேசக் கதவு ஒன்று உடைந்ததம்மா நிம்மியின் கனவெல்லாம் கலைந்ததம்மா. விம்மித் தவிக்குது ஊர் உறவு விடிய மறந்தது ஓர் இரவு நேசனே உந்தன் மீழ்;வரவு எழுந்துவர மாட்டாயோ நண்பனே… நேசன் என்றால் புன்சிரிப்பு நிர்மலாவின் கையிணைப்பு நேர்த்தியான உபசரிப்பு நினைவில் நிற்குதே. யாதுமாகி நின்றவன் யாவருக்கும் நட்பிவன் தேடிவரும் அனைவரையும் திருப்தியோடு பார்ப்பவன். அன்பின் சொரூபனே நீ எங்கே? பண்பின் சிகரமே நீ எங்கே? நட்பின் நாதமே நீ எங்கே? நம்பிக்கையின் தீபமே தூது போ அங்கே! பாசக் கயிறெடுத்து பகிடிவதை செய்வதுபோல் - உன் ஆசைக் கிறுக்கினுக்கு ஓர் அளவில்லையோ எமதர்ம ராசனே! – சிவ நேசனுக்கா வலைவிரித்தாய்? தீயவனே ஒழிந்து போ…. மாண்டவர்கள் மீழ்வதில்லை என்பதில்லை உண்மை தாண்டவிதை அழிவதில்லை தாவரமே உண்மை நேசனிவன் நிம்மதியாய் உறங்குகின்ற தன்மை நீக்கமற நிறைந்திருப்பான் எம்மனதில் உண்மை. ஓம் சாந்தி கவிக்குயில் இசைக்குழு நண்பர்கள்

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 10 Jul, 2020