Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 APR 1950
மறைவு 01 NOV 2022
அமரர் இரத்தினம் இராசரத்தினம் (பொன்னுக்கிளி)
வயது 72
அமரர் இரத்தினம் இராசரத்தினம் 1950 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:21/10/2023

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள்
முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: இரதிஸ்(ரதி) (மகள்),ஸ்ரீதரன் (மருமகன்),ஜெரோன், கிருஸ்ரோன் (பேரப்பிள்ளைகள்).