Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் துரைசிங்கம் (துரை)
மறைவு - 31 MAY 2023
அமரர் இரத்தினம் துரைசிங்கம் 2023 ஏழாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 20-05-2024

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அணையாத தீயினில் அலையான சுவாலையாய்
ஆண்டு ஒன்றாகியும் அனல் கக்கி எரியுதையா
 எங்கள் உடன்பிறப்பே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
 நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
 வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
 எட்டு திக்குகளிலும் உம் நினைவால் வாடுகிறோம்!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும் பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

இங்கனம் 
அமிர்தலிங்கம் புஸ்பலதா(மருமகள்- பிரான்ஸ்),
மகாலிங்கம் ஜெயந்தி குடும்பத்தினர்(சகோதரர்- சுவிஸ்),
விஜயரத்தினம் பவளமலர் குடும்பத்தினர்(தங்கை- சுவிஸ்),
ஓவியா, டெசிகா(மருமகள்- சுவிஸ்),
யோகேஸ்வரன் புஸ்பமலர் குடும்பம், 
டெனோகா(பேத்தி-ஜேர்மனி), 
கோபிநாத் வித்தியரூபா குடும்பம், 
லலிதானா(பேத்தி-இலங்கை), 
இன்பராஜி(மனைவி), கனுசன், வினுசன், சகிலன்(பிள்ளைகள்)
உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்: குடும்பத்தினர்