Clicky

பிறப்பு 05 MAY 1925
இறப்பு 20 DEC 2018
அமரர் இரத்தினசிங்கம் சிவபாக்கியம்
வயது 93
அமரர் இரத்தினசிங்கம் சிவபாக்கியம் 1925 - 2018 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 24 DEC 2018 France

எனது அருமை நண்பர் அமரர் கிருஷ்ணதுரை அவர்களின் அன்னையார் திருமதி சிவபாக்கியம் இரத்தினசிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அமரர் கிருஷ்ணதுரை என்னை விட ஓரிரு வயது மூத்தவராக இருந்தபோதிலும் நானும் அவரும் விக்ரோறியாக் கல்லூரியில் கல்வி கற்றபோது ஒன்றாகவே கல்லூரிக்குச் சென்று வருவோம். எமது வீட்டில் இருந்து புறப்பட்டு அவர்களுடைய இல்லத்துக்குச் சென்று அங்கிருந்து கல்லூரிக்குச் செல்வோம். கல்லூரிக்கும் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அமரர் கிருஷ்ணதுரையின் இல்லத்துக்குச் சென்று திரும்புவது வழமை. அந்த நாட்களின் அவரது அன்னையார் எனக்கு அன்புடன் உவர்ந்து அளித்த சிற்றுண்டிகள் மற்றும் அவர்கள் வீட்டு மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட கொய்யாப் பழம் அருந்தி மகிழ்ந்திருக்கிறேன். அரை நூற்றாண்டு காலம் கடந்து விட்டாலும் அந்த நினைவுகள் என்றுமே மறக்க முடியாது. அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எமது அனுதாபத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். இரத்தினம் கந்தசாமி குடும்பத்தினர் பாரிஸ் - பிரான்ஸ்.