Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1925
இறப்பு 20 DEC 2018
அமரர் இரத்தினசிங்கம் சிவபாக்கியம்
வயது 93
அமரர் இரத்தினசிங்கம் சிவபாக்கியம் 1925 - 2018 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கலைவாரிதி, கலாபூஷணம், கிருஷ்ணதுரை, சிவகங்கை, மதியாபரணம், பரமேஸ்வரன், கோகுலராசா(லியோன்- பிரான்ஸ்), சந்திரா, கலாமணி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, சுந்தரம், அமிர்தலிங்கம், செல்லமுத்து, சித்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வானைப்பிள்ளை, சிவன்யோகம், காலஞ்சென்ற சிவநாயகம், நிர்மலாதேவி, சற்குணேஸ்வரி(சித்திரா), புவனேந்திரன், சிறீஸ்கந்தராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மாணிக்கம் சின்னம்மா(முறிவு, நெறிவு நோய் வைத்தியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெய்சிறிநிவாஸ், ஜெய்சந்தர், காலஞ்சென்ற ஜெய்குமாரி, காலஞ்சென்ற ஜெய்காந்தன், ஜெய்சுகந்தன், ஜெய்ரமணன், ஜெய்சக்தி, மணிவேந்தன், கவிதா, பரணீதரன், பரலீசன், சுபாஜினி, கிரிகரன், ஜெயசிறீ, காலஞ்சென்ற ஜெயகணேஷ், தக்ஷாயினி, கலிதரன், தமிழ்ச்செல்வி, திலீபன், காலஞ்சென்ற ரஜீவன், ராதை, துஷிதா, நிவேதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆரணி, விவேகன், விவேகா, கார்த்திகன், அஞ்சனா, புரந்தரன், பாரதிகிருஷ்ணா, அபிராமி, குபேரன், சிவந்திகா, அபிமன்யூ, தூயா, துர்க்கா, பிரியங்கா, சாத்வீகன், தார்வீகன், குவிக்ஷன், ஹரிணி, யதீஸ், விஷ்ணுயன், இலக்கியன், கதிரவன், றக்‌ஷியா, அக்‌ஷயா, அபர்ணா, வித்தியா, லீசப் ப்ரியா-மீரா, மாதவி, ஜனுஜன், கவிண், நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுளிபுரம் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

Photos

No Photos

Notices