Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரதிலட்சுமி தவஞானம்
மறைவு - 17 MAY 2013
அமரர் ரதிலட்சுமி தவஞானம் 2013 Kokuvil, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ரதிலட்சுமி தவஞானம்  அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா

பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா

நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices