யாழ். வல்வை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northholt ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி செல்வச்சந்திரன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 28-01-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை South Ruislip Community Centre, Deane Park, Long Dr, Ruislip HA4 0HS, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.
Accept our deepest sympathies