யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் முத்துஐயன்கட்டை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சோமேஸ்வரி அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நளாயினி, நந்தினி, யசோதினி, தயாபரன், தனபாலன், சறோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிக்குமார், தேவாகரன், சுதாஸ்கரன், சந்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியும்,
நமிர்தன், கிசானி, சயாழினி, மோகிதன், ரிசானி, கவின், வருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 81, அண்ணா வீதி, ஆனந்தபுரம் மேற்கு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.