1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசு யோகநாதன்
(யோகன்)
வயது 57
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசு யோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி மற்றும் மகன்