

திதி: 26-05-2025
யாழ். கொக்குவில் கிழக்கு சேச்லேனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு பஞ்சரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்தாலும்
ஆறவில்லை நம் துயரம்
உனது உருவம் மறைந்தாலும்
உன் அன்பு மறையாது
பண்புக்கு இலக்கணமாய்
பாதைக்கு வெளிச்சமாய்
பாசம் கொண்டு அனைவரையும்
பக்குவமாய் வழி நடத்தி
குடும்பத்திற்கு ஒளிவிளக்காய்
குலத்திற்கு கொடைவள்ளலாய்
நான் என்று வாழாமல்
நாம் என்று வாழ்ந்திருந்து
நீ வாழ்ந்த காலந்தனை
நினைத்து நீர் சொரியுதையா!
பக்கத்தில் நானிருக்க
பறந்து தான் போனதென்ன?
பதறும் பிள்ளைகளின்
பரிதாபம் என் சொல்வேன்
பரிதவிக்கும் என்னருகே
பக்கத்தில் யாருமில்லை
கைகோர்த்து நீ நடந்த
காலங்கள் இனி வருமோ!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என் உடன் பிறவா அண்ணா, நீங்கள் எங்களை விட்டு விண்ணுலகம் சென்றாலும் என்றென்றும் எங்கள் நினைவில் இருந்து கொண்டே இருப்பீர்கள். 💐