Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 JUL 1949
உதிர்வு 18 NOV 2018
அமரர் இராசைய்யா யோகேஸ்வரி
வயது 69
அமரர் இராசைய்யா யோகேஸ்வரி 1949 - 2018 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புத்தூர் மணல் பகுதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசைய்யா யோகேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!  

ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!  

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!! 

என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: தீபன்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 18 Nov, 2018