Clicky

மலர்வு 04 OCT 1952
உதிர்வு 04 APR 2019
அமரர் இராசையா சுகுமாரன்
இளைப்பாறிய பொலிஸ் Inspector
வயது 66
அமரர் இராசையா சுகுமாரன் 1952 - 2019 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 06 APR 2019 France

அமரர் இராசையா சுகுமாரன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். கடந்த ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அவரது மகனின் திருமண விழாவுக்கு எதிர்பாராத விதமாகச் சென்றபோது சுகுமாரனைச் சந்திக்க முடிந்தது. அவரது துணைவியாரின் ஊரான துன்னாலையிலேயே எனது அக்காவின் மகன் கருணாகரனும் மணம் முடிந்திருந்தார். அதன் காரணமாகவே சுகுமாரனின் மகனின் திருமண விழாவுக்கு கருணாவுடன் நானும் சென்றிருந்தபடியால் கடைசியாக சுகுமாரனைச் சந்தித்திருந்தேன். சுகுமாரன் எமது அயல் வீட்டிலும் பின்னர் சித்தன்கேணி பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் பெற்றோருடன் வாழ்ந்தபோது சந்தித்த பின்னர் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவரது மகனின் திருமண வீட்டில் சந்தித்தேன். கலியாண சந்தடியில் அவருடன் அதிக நேரம் பேச முடியவில்லை. அவரையும் அவரது உறவினர்களையும் சந்திக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே அங்கு சென்றிருந்தேன். காவல் துறையில் அவர் பணியாற்றிய வேளையில் அவரது சேவைகள் பற்றி நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் மூலம் அறிந்து கொண்டேன். கனடாவில் வதியும் தெய்வேந்திரம் விக்னேஸ்வரனின் உதவியுடன் சுகுமாரன் பதவியில் இருந்தபோது பொதுமக்களுக்கு ஆற்றிய உரையையும் வீடியோ மூலம் செவிமடுத்திருந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறு எம்மால் என்னதான் செய்ய முடியும். திரு. திருமதி கந்தசாமி ((Kandos) Paris - France