அமரர் இராசையா இராஜேந்திரா
Retired Nursing Administrative Officer - யாழ் போதனா வைத்தியசாலை
பிறப்பு : 15-06-1932
இறப்பு : 17-09-2018
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராஜேந்திரா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் ஜெயராணி இராஜேந்திரா
Ret. Matron & Lecture - திருநெல்வேலி பெண்கள் விவசாய பாடசாலை, யாழ்ப்பாணம்
பிறப்பு : 07-03-1932
இறப்பு : 16-08-2021
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயராணி இராஜேந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
ஐந்து ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை
அன்னையே நம் உள்ளத்தின்
உள்ளே வாழும் உன்னதமான
அன்னையே - உங்கள் உடல்
மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்கள் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.