

அமரர் இராசையா இராஜேந்திரா
Retired Nursing Administrative Officer - யாழ் போதனா வைத்தியசாலை
பிறப்பு : 15-06-1932
இறப்பு : 17-09-2018
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராஜேந்திரா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் ஜெயராணி இராஜேந்திரா
Ret. Matron & Lecture - திருநெல்வேலி பெண்கள் விவசாய பாடசாலை, யாழ்ப்பாணம்
பிறப்பு : 07-03-1932
இறப்பு : 16-08-2021
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயராணி இராஜேந்திரா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அம்மா! அப்பா!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஆண்டுகள் பல
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன அம்மா! அப்பா!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் அம்மா! அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!