திதி: 27-12-2024
கிளிநொச்சி பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காடு 98/2 சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா முத்தம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை இவ் உலகத்திற்கு ஈன்றவளே!
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிரணுவில் சுவாசிக்கின்றோம் தாயே
எம் உயிர் சுடரால்
என்றும் ஒளி கொடுப்போம் -தாயே
உதிரத்தில் இருந்து எம்மை உயிர் பூவாய் நீ சொரிந்தாய்
உன் உயிரை நீ பிரிந்து எங்கம்மா நீ சென்றாய்!
உனக்கு நாம் விடை கொடுக்க எம் உள்ளம் ஒண்ணாது
நீ எமக்கு விடை கொடு எம் துயர் நீக்க வருவாயா!!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்