யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வேம்படி முருக மூர்த்தி கோவிலடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும் 02-04-2024 செவ்வாய்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கொக்குவில் மஞ்ச வனப்பதி முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக் கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
மஞ்சவனப்பதிமுருகன் கோவில்,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.