
கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசதுரை துரைராசா அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று உருத்திரபுரத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசதுரை(முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை, கிளிநொச்சி டிப்போ சாரதி) பார்வதி(மணி அக்கா) தம்பதிகளின் அருமை மகனும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சேர்ந்த நடராசா ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியா, கஜன்(அவுஸ்திரேலியா), அயந்தினி, ஷாலுஜா(பிரான்ஸ்), சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிந்திரன், சந்திரகுமார், பிரதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
பத்மாவதி, பிரேமாவதி, கிளி, விஜயா, தவராசா(கிளிநொச்சி முருகன்டிப்பிள்ளையார் ஹார்ட்வேர்ஸ்- உரிமையாளர்), காலஞ்சென்ற மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசன்(முன்னாள் கிளிநொச்சி குமரன் சில்க் உரிமையாளர்), பாஸ்கரன், ரவி, ஹம்சா, அனுசா, செல்லா, சசிதரன், சந்திரிகலா, ஜீவகலா, ஜெகதரன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
அபினா, அனுசாந்த், அபிஷன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வினாயகமூர்த்தி- புவனேஸ்வரி, சோமசேகரம்பிள்ளை- செல்வரானி, அம்பலவானர்(லண்டன்)- சரசு, பஞ்சரட்ணம்- செல்வநாயகி, ராணி ஆகியோரின் பெறாமகனும்,
ரவி(விவி டிராவல்ஸ், உரிமையாளர்- நோர்வே)- மாலதி, பிரேம்குமார்(குமரன், கிளிநொச்சி கச்சேரி)- ராஜரஞ்சனி, ஜெயரட்ணம்(சிவா)- கலைவாணி, ராஜன்(நோர்வே)- புஷ்பராணி, சுதா(நோர்வே)- பூங்கோதை, மங்களம்(நோர்வே), ரமேஸ்(நோர்வே), கேதீஸ்(லண்டன்), சிவேஸ்- அபி(லண்டன்), அம்பி-சுஹந்தன், தயா- வதனா(லண்டன்), துஸி- சுதா(லண்டன்), பிரகலாதன்- பூங்கோதை(ஐக்கிய அமெரிக்கா), பரஞ்சோதி- கௌரி(இலங்கை), பஞ்சரட்ணம்- கங்கா(இலங்கை), பஞ்சரட்ணம்- ராதா(இலங்கை), வரதன்- கௌசி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Ravi, We express our sincere condolences to you and your family on the passing of your beloved brother ! Please accept our sympathies as we share the distress with you all this moment.